தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்
ஆலங்குளத்தில் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் தெற்கு ஒன்றியம், பேரூர், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றியம், பேரூர் தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர், ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை அமைப்பாளர் எழில்வாணன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் வரவேற்று பேசினார்.
தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆலோசனை வழங்கினர். கூட்டத்தில் ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.