தி.மு.க. ஆலோசனை கூட்டம்
சிவகிரி அருகே தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
சிவகிரி:
சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரியில் தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் மதியழகன், சிவாஜி ரெஜிகலா, விஸ்வநாதப்பேரி கிளைச் செயலாளர் ராமமூர்த்தி, குருநாதன், ஒன்றிய பிரதிநிதி செல்லத்துரை, சிவகிரி நகரப்பஞ்சாயத்து 18-வது வார்டு உறுப்பினர் வீரபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் கிப்ட்சன் வரவேற்றார்.
வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் முருகன், சாமிநாதன், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். வாசுதேவநல்லூர் யூனியன் தலைவர் பொன். முத்தையா பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு ராஜா எம்.எல்.ஏ. தலைக்கவசம் வழங்கினார்.