தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சொத்துவரி, மின்கட்டணம், பால்விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-12-14 19:30 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சொத்துவரி, மின்கட்டணம், பால்விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விலைவாசி உயர்வு

தி.மு.க. அரசின் சொத்து வரி, மின்கட்டணம், பால்விலை உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் வேடி, வேங்கன், மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் இளையராஜா, தொகுதி செயலாளர் திருஞானம், முன்னாள் நகர செயலாளர் சிவானந்தம், முன்னாள் ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், ஒன்றிய அவை தலைவர்கள் கிருஷ்ணன், சுப்பிரமணி, ஒன்றிய பொருளாளர் சேட்டு குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவானந்தம், மணி, அன்புசமது, பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசம்பட்டி

காவேரிப்பட்டணம் ஒன்றியம் அரசம்பட்டியில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நாகோஜன அள்ளி பேரூர் செயலாளர் அண்ணாதுரை, முன்னாள் ஒன்றிய செயலாளர் பிரபாகரன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய பொருளாளர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் கோ.ரவிசந்திரன் கலந்து கொண்டு தி.மு.க. அரசை கண்டித்து பேசினார். ஒன்றிய குழு உறுப்பினர் சின்ன பாப்பா கண்ணன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் கணேசன், ஒன்றிய மீனவர் அணி செயலாளர் கண்ணப்பன், ஒன்றிய துணை செயலாளர் சுரேந்திரன், அவைத்தலைவர் வடிவேலன், ஊராட்சி மன்ற தலைவர் சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கெபாண்டனர். கூட்டுறவு சங்க தலைவர் பழனிசாமி நன்றி கூறினார்.

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணத்தில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் பையூர் பெ.ரவி தலைமை தாங்கினார். நகர செயலாளர் விமல், மாவட்ட பால்வள தலைவர் குப்புசாமி, முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் பி.டி. சுந்தரேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கீதா கேசவன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் மோகன், மாவட்ட அக்ரோ தலைவர் விக்ரம் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. பேச்சாளர் சமரசம், பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம். சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னாள் நகர செயலாளர் வாசுதேவன், ஒன்றிய அவை தலைவர் சுந்தர், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் மதிவாணன், சண்முகம், பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

ராயக்கோட்டை

கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ராயக்கோட்டை 4 ரோட்டில் உள்ள அண்ணா சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.முருகன் தலைமை தாங்கினார். கட்சியின் துணை பொதுசெயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தி.மு.க. அரசை கண்டித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் எம்.கிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் விமலா சண்முகம், கூட்டுறவு சங்க தலைவர் சுப்பிரமணி, முன்னாள் தலைவர் புருசப்பன், ஒன்றியஅவைத்தலைவர் மாரிமுத்து, துணைசெயலாளர் முனுசாமி, பொருளாளர் மகேஷ்குமார், கூட்டுறவு சங்க இயக்குனர் சபரி சீனிவாசன், பாசறை துணைத்தலைவர் சாந்தகுமார், வார்டு உறுப்பினர் சேகர், ராஜா, செல்வம், ராஜன்ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மத்தூர்

மத்தூர் வடக்கு, தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பஸ் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் தேவராசன் முன்னிலை வகித்தார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தென்னரசு கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் சென்ன கிருஷ்ணன், பொருளாளர் பழனி, ஒன்றிய துணை செயலாளர் இம்தியாஸ் உள்பட ஏராளமான பலர் கலந்து கொண்டனர். சுந்தரவடிவேலு நன்றி கூறினார்.

வேப்பனப்பள்ளி

வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி (கிழக்கு), சைலேஷ் கிருஷ்ணன் (மேற்கு) ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட இணை செயலாளர் மனோரஞ்சிதம் நாகராஜ் முன்னிலை வகித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மத்திகிரி

ஒசூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மத்திகிரி கூட் ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒசூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஹரிஷ் ரெட்டி தலைமை தாங்கினார். தெற்குபகுதி செயலாளர் பி.ஆர்.வாசுதேவன் வரவேற்றார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பாலகிருஷ்ணாரெட்டி, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ், மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயபிரகாஷ், மாவட்ட துணைசெயலாளர் கே.மதன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தெற்குபகுதி துணை செயலாளர் சந்திரன், சார்பு மன்ற நிர்வாகிகள் சென்னகிருஷ்ணன், சாக்கப்பா, கிருஷ்ணன், பீரப்பா, சீனிவாசன் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்