ஆஸ்கார் விருது பெற்ற குறும்படத்தில் நடித்த யானை பாகனுக்கு தி.மு.க.வினர் வாழ்த்து

Update: 2023-03-14 18:45 GMT

தர்மபுரி:

முதுமலையில் யானைகளை பராமரித்து வரும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த யானை பாகன் பொம்மன் நடித்த ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. இந்த படத்தில் நடித்த பொம்மன் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அத்திமுட்லு பகுதியில் தாயை இழந்து தவிக்கும் 2 குட்டி யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஆவண குறும்படம் ஆஸ்கார் வென்றது இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமைக்குரிய தருணம் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் வாழ்த்து தெரிவித்த நிலையில், தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி அத்திமுட்லு கிராமத்துக்கு சென்று யானை பாகன் பொம்மனை நேரில் சந்தித்து பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது வனத்துறை அதிகாரி நட்ராஜ், மாவட்ட தி.மு.க. பொருளாளர் தங்கமணி, நல்லம்பள்ளி ஒன்றிய குழு துணை தலைவர் பெரியண்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கவுதம், கவுன்சிலர் கார்த்தி, நிர்வாகி ரகு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்