கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க. உட்கட்சி தேர்தல் முடிந்து, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர்கள் மற்றும் பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
கிருஷ்ணகிரி கிழக்கு
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக மாநில விவசாய அணி துணைத் தலைவரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டி.மதியழகன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதே போல் மாவட்ட அவைத்தலைவராக தட்ரஅள்ளி நாகராஜ், துணை செயலாளர்களாக கோவிந்தசாமி, சந்திரன், நகர்மன்ற துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளராக கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர்களாக செந்தில், கிருபாகரன், கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவர் பரிதா நவாப், பொதுக்குழு உறுப்பினர்களாக பாலன், சாமிநாதன், நாகராசன், கோதண்டன், அஸ்லம் ரஹ்மான் ஷெரீப், சித்ரா சந்திரசேகர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், கிருஷ்ணகிரி நகர செயலாளராக நவாப், ஒன்றிய செயலாளர்களாக ஊத்தங்கரை வடக்கு மூன்றாம்பட்டி குமரேசன், ஊத்தங்கரை தெற்கு ரஜினிசெல்வம், ஊத்தங்கரை மத்தியம் செல்வராஜ், மத்தூர் வடக்கு வசந்தரசு, மத்தூர் தெற்கு முன்னாள் எம்.எல்.ஏ. நரசிம்மன், கிருஷ்ணகிரி கிழக்கு கோவிந்தன், கிருஷ்ணகிரி மேற்கு தனசேகரன், பர்கூர் வடக்கு முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், பர்கூர் தெற்கு அறிஞர், போச்சம்பள்ளி சாந்தமூர்த்தி, காவேரிப்பட்டணம் கிழக்கு மகேந்திரன், காவேரிப்பட்டணம் மேற்கு சுப்பிரமணி, பேரூர் கழக செயலாளர்களாக நாகரசம்பட்டி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, காவேரிப்பட்டணம் பாபு, பர்கூர் வெங்கட்டப்பன், ஊத்தங்கரை பாபு சிவக்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மேற்கு
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. அறிவிக்கப்பட்டுள்ளார். மாவட்ட அவைத் தலைவராக யுவராஜ், மாவட்ட துணை செயலாளர்களாக முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், சின்னசாமி, புஷ்பா சர்வேஷ், பொருளாளராக சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினர்களாக எல்லோராமணி, வீரா, கிரீஷ், பொதுக்குழு உறுப்பினர்களாக ஜெயராமன், முனிராஜ், சீனிவாசன், அப்துல்கலாம், தனலட்சுமி, அருணா பூசன்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஓசூர் மாநகர செயலாளராக மேயர் எஸ்.ஏ.சத்யா, அவைத் தலைவராக செந்தில்குமார், துணை செயலாளர்களாக கோபால கிருஷ்ணன், ரவிக்குமார், சாந்தி, பொருளாளராக தியாகராஜி, பகுதி செயலாளர்களாக ஓசூர் கிழக்கு ராமு, மேற்கு ஆனந்தய்யா, வடக்கு வெங்கடேஷ், தெற்கு திம்மராஜ் ஆகியோரும், பேரூர் கழக செயலாளர்களாக தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் டி.ஆர்.சீனிவாசன், கெலமங்கலம் தஸ்தகீர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேப்பனப்பள்ளி
ஒன்றிய செயலாளர்களாக வேப்பனப்பள்ளி கிழக்கு டி.எஸ்.கருணாகரன், வேப்பனப்பள்ளி மேற்கு ஏ.எம்.ரகுநாத், சூளகிரி வடக்கு நாகேஷ், சூளகிரி தெற்கு பாக்கியராஜ், கெலமங்கலம் கிழக்கு சின்னராஜ், கெலமங்கலம் மேற்கு ஸ்ரீதர், அஞ்செட்டி தணிகாசலம், ஓசூர் கஜேந்திரமூர்த்தி, தளி வடக்கு சீனிவாசலு, தளி தெற்கு திவாகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.