நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை: தென்மாவட்டங்களை நோக்கி படையெடுத்த மக்கள் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்தன

நாளை மறுநாள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக தென்மாவட்டங்களை நோக்கி மக்கள் படையெடுத்தனா். இதனால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து சென்றன.

Update: 2022-10-21 18:45 GMT


விக்கிரவாண்டி, 

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை நாளைமறுநாள்(திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனால் சென்னையில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊரை நோக்கி நேற்று முதல் புறப்பட்டனர். இதனால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

வழக்கமாக தினசரி 25 ஆயிரம் வகானங்கள் வரையில் செல்லும். ஆனால் நேற்று மாலை நிலவரப்படி 40 ஆயிரம் வாகனங்கள் வரைக்கும் தென்மாவட்டங்களை நோக்கி சென்றன. தற்போது 97 சதவீத வாகனங்கள் பாஸ்டேக் முறையில் சென்றதால், பெரும் நெரிசல் தவிர்க்கப்பட்டது இதற்கிடையே விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா உத்திரவின் பேரில் போக்குவரத்து போலீசார், ரோந்து போலீசார் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வாகனங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்