உத்தமபாளையத்தில் மரக்கன்றுகள் நட்டு தீபாவளி கொண்டாடிய இளைஞர்கள்

உத்தமபாளையத்தில் மரக்கன்றுகள் நட்டு இளைஞர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.

Update: 2022-10-25 17:22 GMT

உத்தமபாளையம் நன்செய் பசுமை இயக்கம், கோகிலாபுரம் பசுமை இயக்கத்தை சேர்ந்த தன்னார்வ இளைஞர்கள் சார்பில் மரக்கன்றுகள் நட்டு தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது தாமரைக்குளம் கண்மாய், உத்தமபாளையம் கோம்பை ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உத்தமபாளையத்தை சேர்ந்த பசுமை செந்தில் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மரக்கன்றுகள் நட்டனர்.

மேலும் பனை விதைகளையும் நடவு செய்தனர். அதேபோல் ஏற்கனவே நடவு செய்த மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியிலும் ஈடுபட்டனர். பொதுவாக தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடித்து பொதுமக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்துவார்கள். ஆனால் மரக்கன்றுகள் நட்டு தீபாவளியை கொண்டாடிய இளைஞர்களை பலரும் பாராட்டினர். 

Tags:    

மேலும் செய்திகள்