சங்ககிரி:-
சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற சிவகுமார் முதல் முறையாக நேற்று இரவு சங்ககிரியில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் அலுவலகத்தில் திடீரென ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சங்ககிரி கோட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஆவணங்களை பார்வையிட்ட அவர், நிலுவை வழக்குகளில் தலைமறைவாக இருப்பவர்களை பிடித்து கோர்ட்டில் ஒப்படைத்து வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் வரவேற்பு அளித்தனர்.