கே.வி.குப்பம் பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

கே.வி.குப்பம் பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update:2023-03-30 22:59 IST

கே.வி.குப்பம் பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது கே.வி.குப்பம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு, தாலுகா அலுவலகம் அருகில் நடைபெற்று வரும் தாசில்தார் குடியிருப்பு ஆகிய பணிகளை பார்வையிட்டார். கீழ் மூட்டுக்கூர், தொண்டான்துளசி ஆகிய பகுதிகளில் வீட்டுமனை பட்டாக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வில் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் மேற்கொண்டு வரும் பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்து கேட்டறிந்து விரைந்து முடிக்க உத்தரவிட்டார். நிகழ்ச்சிகளின் போது தாசில்தார் அ.கீதா, மண்டல துணை தாசில்தார் ப.சங்கர், வருவாய் ஆய்வாளர்கள், அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்