மாவட்ட அளவிலான கபடி போட்டி

இளையான்குடியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது.;

Update: 2022-06-06 18:45 GMT

இளையான்குடி,

இளையான்குடியில் மதினா ஸ்டார் கபடி குழுவின் 32-ம் ஆண்டு கபடி போட்டிகள் நடைபெற்றன. மாவட்ட அளவிலான 32 அணிகள் கலந்து கொண்ட கபடி போட்டிகளில் இறுதி சுற்றில் 8 அணிகள் தகுதி பெற்றன. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இளையான்குடி, ஆழிமதுரை, கருஞ்சுத்தி, கீழாயூர், சேலம் மாவட்டம் சாமி பிரதர்ஸ், கோவை பல்கலைக்கழக அணி, திருச்சி மாவட்டம் ஸ்டார் அகாடமி டி.எம்.எஸ். அணி, புதுக்கோட்டை மாவட்ட அணி ஆகியவை பங்குபெற்றன.. இதில் திருச்சி மாவட்டம் ஸ்டார் அகாடமி அணி முதல் பரிசை பெற்றது.முதல் பரிசு மற்றும் கோப்பைகளை இளையான்குடி பேரூராட்சி தலைவர் செய்யது ஜமிமா வழங்கினார். 2-ம் பரிசை புதுக்கோட்டை மாவட்டம் பெரு மாநாட்டு அணி பெற்றது. பரிசுத் தொகை மற்றும் கோப்பையை பேரூராட்சி துணைத்தலைவர் சபுரியத்பீவி வழங்கினார். 3-ம் பரிசு மற்றும் 4-ம் பரிசு கோவை கற்பகம் பல்கலைக்கழகம் மற்றும் சேலம் மாவட்டம் சாமி பிரதர்ஸ் அணியினர் பெற்றனர்.இவர்களுக்கான பரிசு மற்றும் கோப்பைகளை மாவட்ட பிரதிநிதிகள் செய்யது கான் மற்றும் முகமது யாசின், ஒன்றிய பிரதிநிதி மூனாப் பசீர் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் துணைச்செயலாளர் அப்துல் ஜமால், பிரதிநிதி கென்னடி, சாலையூர் ஹைதர் அலி, முகமது மகாதீர், கோஸ் ஜாகீர் மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்