வட்டார அளவிலான கால்பந்து போட்டி
வட்டார அளவிலான கால்பந்து போட்டியில் தொன்போஸ்கோ பள்ளி முதலிடம் பிடித்தது.;
ஜோலார்பேட்டை அருகே பார்சம்பேட்டை பகுதியில் உள்ள தொன்போஸ்கோ பள்ளி வளாகத்தில் ஜோலார்பேட்டை வட்டார அளவிலான கால்பந்து போட்டி சூப்பர் சீனியர், சீனியர் மற்றும் ஜூனியர் ஆகிய மூன்று பிரிவுகளில் நடைபெற்றது. இதில் ஜோலார்பேட்டை, ஏலகிரி மலை, ஆலங்காயம், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதி பள்ளிகளில் இருந்து 15 அணியினர் கலந்து கொண்டனர்.
சூப்பர் சீனியர் பிரிவில் ஜோலார்பேட்டை நிதியிதவி பெறும் தொன்போஸ்கோ மேல் நிலை பள்ளி முதலிடமும், திருப்பத்தூர் தொன்போஸ்கோ மேல் நிலை பள்ளி 2-ம் இடமும் பிடித்தது. சீனியர் பிரிவில் திருப்பத்தூர் தொன்போஸ்கோ மேல் நிலைபள்ளி முதலிடமும், ஜோலார்பேட்டை தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடமும் பிடித்தது. ஜூனியர் பிரிவில் ஜோலார்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி முதலிடமும், ஏலகிரி மலை அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடமும் பிடித்தன.
முதலிடம் பிடித்த அணிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றது. வெற்றிபெற்ற அணி வீரர்களை பள்ளி தாளாளர் பிரான்சிஸ் சேவியர், தலைமை ஆசிரியர் ஐசக், உடற்கல்வி ஆசிரியர்கள் அலெக்ஸாண்டர், ஏசுராஜ் ஆகியோர் பாராட்டினர்.