வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம்
கீழ்பென்னாத்தூரில் வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.;
கீழ்பென்னாத்தூர்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டார இயக்க மேலாண்மை அலகு திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் ஆகிய வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.
இதில் பல்வேறு அரசு துறையின் கீழ் ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், மாவட்டத் தொழில் மையம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு கழகம் போன்ற திட்டங்களில் இலவச திறன் பயிற்சிகளுக்கு இளைஞர்கள் தேர்வு நடந்தது.
முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டயப் படிப்பு முடித்த 190 பேர் கலந்து கொண்டனர். இதில் 104 பேர் தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் திட்ட இயக்குனர் சையத் சுலைமான் தலைமை தாங்கி 104 பேருக்கு தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான உத்தரவு சான்றுகளை வழங்கி பேசினார்.
உதவி திட்ட அலுவலர் எஸ்.சந்திரகுமார் வரவேற்றார். உதவி திட்ட அலுவலர் ஜான்சன் திட்டம் குறித்து பேசினார்.
இதில் திருவண்ணாமலை வட்டார இயக்க மேலாளர் ஆனந்தன் மற்றும் மகளிர் திட்ட அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கீழ்பென்னாத்தூர் வட்டார இயக்க மேலாளர் சுகந்தி நன்றி கூறினார்.