மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.;
சிவகாசி,
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் நாரணாபுரத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோப்பை மற்றும் ரொக்க பணம் பரிசளித்தார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநத்தம் ஆரோக்கியராஜ், புதுப்பட்டி கருப்பசாமி உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.