மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்

பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் 2-ந் தேதி நடக்கிறது.

Update: 2023-08-27 17:34 GMT

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை, சவகர் சிறுவர் மன்றம் சார்பில் 2022-23-ம் நிதியாண்டில் கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 9 முதல் 12 மற்றும் 13 முதல் 16 வயது வரை உள்ள சிறார்களுக்கிடையே குரலிசை, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம் மற்றும் ஓவியம் ஆகிய நான்கு கலைப் பிரிவுகளில் மாவட்ட அளவில் கலைப் போட்டிகள் நடத்தி, முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி பெறுகின்ற மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் பாராட்டுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கிட நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்பேரில் திருப்பத்தூர் மாவட்ட அளவிலான போட்டிகள் லிங்கன்னமணி மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் வருகிற 2-ந் தேதி தேதி நடக்கிறது. குரலிசைப் போட்டியில் தமிழில் அமைந்த இசை வடிவங்கள் பாட வேண்டும். பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற நடனப் போட்டியில் அதிகபட்சம் 4 நிமிடங்கள் ஆட அனுமதிக்கப்படுவார்கள். இப்போட்டியில் நாட்டுப்புற நடனப் போட்டியில் நமது பாரம்பரிய நடனங்களான கரகம். ஒயில், காவடி, தப்பாட்டம், போன்ற நடனங்கள் மட்டும் ஆடவேண்டும். ஓவியப் போட்டிக்கு ஓவியத்தாள், வர்ணங்கள் தூரிகைகள் உட்பட தங்களுக்குத் தேவையானவற்றை போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும். ஓவிய தலைப்புகள் போட்டி தொடங்கும் முன்னர் அறிவிக்கப்படும்.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்