இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழுக்கூட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழுக்கூட்டம் நடந்தது.
கரூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாக குழு மற்றும் மாவட்ட குழுக்கூட்டம் வேலாயுதம்பாளையம்-கரூர் செல்லும் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மோகன் குமார் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் நாட்ராயன் கலந்து கொண்டு மாநில குழு முடிவுகள் பற்றி பேசினார். கூட்டத்தில் கரூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து மாநில அளவிலான உயர் அதிகாரிகளைக் கொண்டு விசாரணை செய்ய வேண்டும். கல்லூரி உடற்கல்வி பேராசிரியர் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்,
மேலப்பாளையம் -கோயம்பள்ளி இடையே அமாராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.