வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

திருவெண்காடு பகுதியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்;

Update: 2022-07-07 16:31 GMT

திருவெண்காடு:

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கீழ சட்டநாதபுரம் ஊராட்சியில் சீர்காழி-பூம்புகார் சாலையில் மழைக்காலங்களில் வெள்ள நீர் வடியாமல், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் துரைராஜன், மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என கலெக்டரிடம் கேட்டுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ரூ.60 லட்சத்தை மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்தார். தற்போது அந்த பணிகள் முடிவடைந்துள்ளன. அந்த பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அந்தப் பகுதியில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சாலை, தார்ச்சாலை பணிகளையும் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து கீழ சட்டநாதபுரம் ெதாடக்கப்பள்ளிக்கு சென்ற அவர் சத்துணவு கூடம் மற்றும் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டார்.

இதேபோல் மேல செம்பதனிருப்பு பிள்ளையார் கோவில் தெருவில் ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகாலை ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) அருள்மொழி, ஊராட்சி மன்ற தலைவர் துரைராஜ், ஒன்றிய பொறியாளர்கள் சிவக்குமார், கலையரசன், தெய்வானை ஆகியோர் உடன் இருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்