மாவட்ட செஸ் சாம்பியன்ஷிப் போட்டி

மாவட்ட செஸ் சாம்பியன்ஷிப் போட்டி;

Update:2022-08-28 23:59 IST

நீடாமங்கலம்

சித்தர்வேடம் பூண்டு சிவபெருமான் சதுரங்கம் விளையாடிய பூவூனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் திருவாரூர் மாவட்ட செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நடந்தது. இதில் திருவாரூர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, அரியலூர், சேலம், திருச்சி ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த 250 பேர் கலந்து கொண்டு விளையாடினர். இதன் தொடக்க விழாவுக்கு மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் ரெங்கையன் தலைமை தாங்கினார். கோவில் நிர்வாக அதிகாரி பிரபாகரன், நீலன்மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி செயலாளர் சுரேன், ஒன்றியக்குழு உறுப்பினர் பாரதிமோகன், ஊராட்சிமன்ற தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை இணைஆணையர் ராமு பரிசு வழங்கினார். இதில் திருவாரூர் மாவட்ட சதுரங்ககழக தலைவர் சாந்தகுமார், துணைத் தலைவர்கள் பாலன், முரளிதரன், செயலாளர் பாலகுணசேகரன், இணைச்செயலாளர் சரவணன், கோவில் தக்கார் மாதவன், பேராசிரியர் இருளப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பொதுப்பிரிவில் வெற்றி பெற்ற வீரர்கள் மாநில அளவிலான போட்டியில் விளையாட உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்