கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்கஅரசின் உதவித்தொகை உயர்வு-மாவட்ட நிர்வாகம் தகவல்
கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவ தேவாலயங்கள்
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-2017-ம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் பின்வருமாறு கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானியத் தொகை உயர்த்தியும் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.
அதில், தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீர் வசதிகள் உருவாக்குதல் போன்றவைகளுக்கு கூடுதலாக பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேவாலயம், 10 முதல் 15 ஆண்டுகள் வரை இருப்பின் வழங்கப்படும் தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாகவும், 15 முதல் 20 ஆண்டுகள் வரை இருப்பின் வழங்கப்படும் தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாகவும் மற்றும் 20 ஆண்டுகளுக்கு மேல் இருப்பின் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. உதவிதொகைகேட்டு, உரிய ஆவணங்களுடன் பெறப்படும் விண்ணப்பங்களை, இதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழுவின் மூலம் பரிசீலித்து, கிறிஸ்தவ தேவாலயங்களில் உரிய ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து, உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குனருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரைக்கப்படும். அதன் பின்னர், நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக்கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.