சான்று ெபற்ற நெல் விதைகள் வினியோகம்
ராமநாதபுரம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில், நடப்பு சம்பா பருவத்திற்கு தேவையான விவசாயிகள் விரும்பும் ரகங்களின் சான்று பெற்ற நெல் விதைகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில், நடப்பு சம்பா பருவத்திற்கு தேவையான விவசாயிகள் விரும்பும் ரகங்களின் சான்று பெற்ற நெல் விதைகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ெநல் விைதகள்
ராமநாதபுரம் வட்டாரத்தில் விவசாயிகள் தங்களது நிலங்களை நன்கு உழுது நெல் விதைப்பிற்கு தயாராக வைத்துள்ளனர். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் விதைப்பு மேற்கொள்வர். ராமநாதபுரம் வட்டார விவசாயிகள் பி.பி.டி. 5204, என்.எல்.ஆர். 34449, ஆர்.என்.ஆர். 15048, கோ 51 போன்ற உயர் விளைச்சல் நெல் ரகங்களையே அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த ரகங்களின் விதைகள், ராமநாதபுரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் 51 மெட்ரிக்டன் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது. நெல் விதைகள் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் மற்றும் விதை கிராம திட்டங்களின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் வினியோகம் செய்யப்படுகிறது.
கூடுதல் மகசூல்
கோ 51 நெல் ரகம் 105-110 நாட்கள் வயதுடைய குறுகிய கால பயிராகும். ராமநாதபுரம் வட்டாரத்திற்கு ஏற்ற உயர் விளைச்சல் நெல் ரகமாகும். விவசாயிகள் சான்று பெற்ற உயர் விளைச்சல் நெல் ரகங்களை பயன்படுத்துவதுடன் விதைப்பு முதல் அறுவடை வரை மேம்படுத்தப்பட்ட சாகுபடி தொழில் நுட்பங்களை கடைபிடித்து கூடுதல் மகசூல் பெறலாம்.
இந்த தகவலை ராமநாதபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.