மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.;

Update: 2023-04-12 19:00 GMT

திருவேங்கடம்:

குருவிகுளம் அரசு சித்த மருத்துவமனையின் சார்பில் அத்திப்பட்டி ஸ்ரீகணேசா தொடக்கப்பள்ளியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடந்தது. சித்த மருத்துவர் ஆர். பால்ராஜ் தலைமை தாங்கினார். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் மருந்தாளுனர் முருகேஸ்வரி, சித்த மருத்துவர் (பயிற்சி) ம.கிருஷ்ணவேணி, வேதியியல் பொறியாளர் இரா.ரவிசங்கர், பள்ளி தாளாளர் வெங்கடசுப்பிரமணியன், ஆசிரியர்கள் ச.விஜயலட்சுமி, க.இரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்