விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்

தக்கலை தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்

Update: 2023-04-18 18:45 GMT

தக்கலை, 

தமிழ்நாடு தீயணைப்பு துறையின் தீ தொண்டு நாளையொட்டி தக்கலை தீயணைப்பு நிலையம் சார்பில் புலியூர்குறிச்சி, குமாரகோவில், பிரம்மபுரம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் மேற்கொண்டனர். நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் தக்கலை இந்து வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகளுக்கும், குமாரகோவில் நூருல் இஸ்லாம் பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், குமாரகோவிலுக்கு வந்த பக்தர்களுக்கும், குமாரகோவில் விலக்கு பகுதியில் பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் மேற்கொண்டனர்.

இதுபோல் வருகிற 20-ந் தேதி வரை தக்கலை சுற்றுவட்டார பகுதிகளில் தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக தக்கலை நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்