துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு பிரசாரம்
துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு பிரசாரம்;
குடவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சார்பில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி வாகனத்தில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இந்த பிரசாரத்தை குடவாசல் வட்டார கல்வி அலுவலர் குமரேசன் தொடங்கி வைத்து பேசுகையில், பொதுமக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியிலேயே சேர்த்து பயனடைய வேண்டும் என்றார். இதில் மேற்பார்வையாளர் பூபாலன், ஆசிரியர் பயிற்றுனர் கவிதா மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு அரசுபள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர். முடிவில் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.