வழித்தட பிரச்சினையில் தகராறு; 9 பேர் மீது வழக்கு

Update: 2023-08-02 19:30 GMT

ஏரியூர்:-

ஏரியூர் அருகே உள்ள மூங்கில்மடுவு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். விவசாயி. இவரது குடும்பத்திற்கும், அதேபகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது குடும்பத்திற்கும் பொது வழித்தட பிரச்சினை இருந்து வந்தது. நேற்று முன்தினம் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதுதொடர்பாக இருதரப்பினரும் ஏரியூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இருதரப்பிலும் தங்கராஜ், ஆறுமுகம் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்