இடப்பிரச்சினையில் தகராறு; 8 பேர் மீது வழக்கு

தேனி அருகே இடப்பிரச்சினை தகராறில் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-12-11 18:45 GMT

தேனி அருகே மாரியம்மன் கோவில்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் இடப்பிரச்சினை தொடர்பாக இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக ஒரு தரப்பை சேர்ந்த வெங்கடேஸ்வரன் உள்பட 3 பேர் மீதும், மற்றொரு தரப்பை சேர்ந்த பொன்னுத்தாய் உள்பட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்