செஞ்சி அருகே 480 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

செஞ்சி அருகே 480 லிட்டா் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.

Update: 2022-06-08 16:21 GMT

செஞ்சி, 

செஞ்சி பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட கலால் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டி, செஞ்சி மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன் மற்றும் போலீசார் செஞ்சி பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது காரை கிராமத்தில் அதே ஊரை சேர்ந்த சிவா(வயது 45) என்பவருடைய நிலத்தில் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த 230 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர். மேலும் நிலத்தின் உரிமையாளர் சிவா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் அனந்தபுரம் அருகே உள்ள சங்கீதமங்கலம் காப்புக் காட்டில் சாராயம் காய்ச்சுவதற்காக பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 250 லிட்டர் சாராய ஊறலையும் போலீசார் கைப்ற்றி அழித்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்