கல்வராயன்மலையில் 1,400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 1,400 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர்.

Update: 2022-06-11 16:40 GMT

கச்சிராயப்பாளையம், 

கச்சிராயப்பாளையம் அடுத்த கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்சப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் உத்தரவின்பேரில் கரியாலூர் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கல்வராயன்மலையில் உள்ள அரண்மனை புதூர் சோலைமணி ஓடை பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 1400 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர். மேலும் சாராய காய்ச்சியது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்