தென் மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு - மேயர் பிரியா தகவல்
வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க அரசு சார்பில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.;
சென்னை,
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கவும், நிவாரண உதவிகளை வழங்கவும் அரசு சார்பில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தென் மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் சென்னையில் இருந்து நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் இருந்து மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோரும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.