ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

பதிவேடுகள் பராமரிப்பதில் விதிமீறல் நடைபெற்றதால் ஊராட்சி செயலாளரை பணியிடை நீக்கம் செய்து மயிலாடுதுறை கலெக்டர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-06-14 19:00 GMT

கொள்ளிடம்:

பதிவேடுகள் பராமரிப்பதில் விதிமீறல் நடைபெற்றதால் ஊராட்சி செயலாளரை பணியிடை நீக்கம் செய்து மயிலாடுதுறை கலெக்டர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பணியிடை நீக்கம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சியில் ஆய்வு தணிக்கையின் போது கணக்கு, பதிவேடுகள் பராமரித்தல் மற்றும் வரவு செலவுகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றில் விதிமீறல்கள் நடைபெற்றது தெரிய வந்தது.

இதனால் ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து தற்போது மாதிரவேளூர் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணி புரிந்து வரும் செந்தில்குமார் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்.

கூடுதல் பொறுப்பு

மதிரவேளூர் ஊராட்சியின் பணிகளை மேற்கொள்ள அருகில் உள்ள ஊராட்சி செயலாளரை கூடுதல் பொறுப்பு வகித்திட உரிய ஆணைகள் வழங்கிட கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சியின் வரவு, செலவினங்கரளை மேற்கொள்ள ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவருக்கு மாவட்ட கலெக்டர் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்