மாநகராட்சி ஊழியர் பணியிடை நீக்கம்

பணி சரியாக செய்யாததால் மாநகராட்சி ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.;

Update: 2022-09-21 19:21 GMT

சிவகாசி, 

சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் சிவகாசி பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தனர். அப்போது பஸ் நிலையத்தில் இருந்து குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட சுகாதாரபிரிவு ஊழியர் குருசாமியிடன் விளக்கம் கேட்ட போது அவர் பணிகளை சரி வர செய்யாமல் இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து கமிஷனர் கிருஷ்ணசாமி, குருசாமியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் மாநகராட்சி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்