கரும்பு பயிரை பாதிக்கும் சுடுமல்லி ஒட்டுண்ணிகளை அழிக்கும் வழிமுறைகள் வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கம்
கரும்பு பயிரை பாதிக்கும் சுடுமல்லி ஒட்டுண்ணிகளை அழிக்கும் வழிமுறைகள் வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கம்
பரமத்திவேலூர்:
கரும்பு பயிைர பாதிக்கும் சுடுமல்லி ஒட்டுண்ணிகளை அழிக்கும் வழிமுறைகள் குறித்து பரம்த்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுடுமல்லி ஒட்டுண்ணி
பரமத்தி வட்டாரத்தில் தற்சமயம் கரும்பு பயிரிடப்படும் பல இடங்களில் சுடுமல்லி எனும் ஸ்டிரைகா ஒட்டுண்ணி களையானது கரும்பு சாகுபடியை வெகுவாக பாதித்துள்ளது. இது கரும்பில் இருந்து ஊட்டச்சத்து மற்றும் நீரினை உறிஞ்சிக் கொள்கிறது. இதனால் கரும்பின் உற்பத்தி திறன் மற்றும் தரம் பாதிக்கப்படுகிறது.
பயிறு வகைகளான பீன்ஸ், சோயா மொச்சை, அவரை, நிலக்கடலை போன்றவற்றை ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் சுடுமல்லியின் வளர்ச்சி தடுக்கப்படும். சுடுமல்லி பூக்கும் பருவம் தொடங்கிய 2 அல்லது 3 வாரங்களில் அதன் விதைகள் கீழே விழுந்து விடாதவாறு வயலிருந்து அகற்றி எரித்து விடவேண்டும்.
களைக்கொல்லி
2, 4-டி மருந்து கிடைக்கும் பட்சத்தில் அதனை 3 அல்லது 4 முறை களை எடுப்பதற்கு பதிலாக பயன்படுத்தலாம். சுடுமல்லி ஒட்டுண்ணி களைகளை கட்டுப்படுத்த முதலில் அட்ரசின் அட்டாப் 1 கி.கி/ ஹெக்டர் களைக்கொல்லியை களைகள் முளைக்கும் முன் மருந்து இட வேண்டும்.
கரணை விதைத்த 45 நாட்களுக்கு பின் ஒரு கைகளை நீக்கமும், 90 நாட்கள் கழித்து ஒரு மண் அணைப்பது அவசியம். மேலும் விவரங்களுக்கு கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பரமத்தி உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.