மாநகராட்சி பள்ளி மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடல்

போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணனுடன் மாநகராட்சி பள்ளி மாணவ- மாணவிகள் கலந்துரையாடினர்.

Update: 2022-08-30 15:46 GMT

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலை 'காபி வித் போலீஸ் கமிஷனர்' என்ற நிகழ்ச்சி முதன்முறை யாக நடைபெற்றது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணனுடன், கோட்டைமேடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் 78 பேர் கலந்துரையாடினர்.

அப்போது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆவது எப்படி? பள்ளியிலோ, வீடுகளிலோ சிறுவர்களுக்கு எதிராக குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான சட்ட வழிமுறைகள் என்ன?, வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டமான சூழலை எதிர்கொண்ட விதம், போலீஸ் துறையில் என்னென்ன பதவிகள் உள்ளன? என்பன உள்பட பல்வேறு மாணவ- மாணவிகள் கேள்விகளை கேட்டனர். அதற்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பதில் அளித்தார்.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளுடன் போலீஸ் கமிஷனர் தேநீர் குடித்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். முன்னதாக 2 மாணவிகள் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனின் உருவத்தை ஓவியமாக வரைந்து வழங்கினர். இதையடுத்து மாணவ- மாணவிகள் மோப்பநாய் பிரிவுக்கு சென்று மோப்பநாய்களின் செயல்படுகளை கேட்டறிந்தனர்.

மேலும் செய்திகள்