அகழாய்வில் சங்கு வளையல்கள் கண்டெடுப்பு

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன.

Update: 2023-08-27 19:02 GMT

தாயில்பட்டி, 

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன.

அகழாய்வு

வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் பழங்கால மண்பாண்ட ஓடுகள், நேற்று முன்தினம் தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் ஏராளமான பாசி மணிகள், சங்கினால் செய்யப்பட்ட வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நீண்ட காலம் சேதமடையாமல் இருக்க சங்கு வளையல்களை பெண்கள் பயன்படுத்தி உள்ளனர். இதுவரை 16 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதில் 12 குழிகள் முழுமையாக 15 அடி ஆழம் தோண்டப்பட்டுள்ளது.

3,580 பொருட்கள்

2-ம் கட்ட அகழாய்வில் இதுவரை 3,580 பொருட்கள் கிடைத்துள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார். முதலாம் கட்ட அகழாய்வில் கிடைத்த மண்பாண்ட பொருட்கள், பாசிமணிகள், சுடு மண்ணால் ஆன விளையாட்டு பொருட்கள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள், ஏற்றுமதிக்கு பயன்படுத்திய முத்திரைகள் உள்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பண்டைய கால பொருட்கள் தனி, தனி அரங்குகளாக கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. இதனை தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து எண்ணற்ற மாணவர்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்தநிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை காட்டிலும் பாா்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்