பழங்கால முருகபெருமான் கற்சிலை கண்டெடுப்பு

கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரையில் பழங்கால முருகபெருமான் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.;

Update:2023-01-01 01:19 IST

அம்பை:

கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரையில் பழங்கால முருகபெருமான் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

முருக பெருமான் கற்சிலை

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பழனி ஆண்டவர் கோவில் அருகில் தாமிரபரணி ஆற்றங்கரையில் நேற்று பழமைவாய்ந்த முருக பெருமான் கற்சிலை கிடந்தது. முருக பெருமான் மயில் மீது வீற்றிருக்கும் வகையில் சுமார் 3½ அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட அந்த சிலையின் இடது கை சற்று சேதமடைந்த நிலையில் இருந்தது.

இதுகுறித்து அப்பகுதியினர் அம்பை தாலுகா அலுவலகத்துக்கு தெரிவித்தனர். உடனே தாசில்தார் விஜயா மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, அந்த கற்சிலையை மீட்டு தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

அருங்காட்சியகத்தில்...

இதுதொடர்பாக தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவித்து, பழங்கால கற்சிலையின் தொன்மையை அறிந்து, நெல்லை அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் கோவிலில் சேதமடைந்த பழங்கால சிலையை எடுத்து வந்து யாரேனும் ஆற்றில் வீசினரா? அல்லது சிலையை தயாரித்தபோது சேதமடைந்ததால் அதனை ஆற்றில் வீசிச் சென்றனரா? என பல்வேறு கோணங்களிலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்