தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் 2 குடிநீர் இணைப்பு துண்டிப்பு

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் 2 குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

Update: 2023-09-26 18:45 GMT

தூத்துக்குடி பீச் ரோடு பகுதியில் பழைய துறைமுகம் அமைந்து உள்ளது. இந்த துறைமுக கட்டிடங்களுக்கு 8 குடிநீர் இணைப்புகள் உள்ளன. இந்த குடிநீர் இணைப்புகளுக்கு சுமார் ரூ.10 லட்சம் வரை பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலையில் 2 குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர். மேலும் பாக்கித் தொகையை செலுத்தாத நிலையில் மற்ற இணைப்புகளையும் துண்டிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்