50 பேருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் 50 பேருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

Update: 2022-10-07 19:45 GMT

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் திண்டுக்கல் மாவட்ட செயற்குழு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம், திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத் தலைவர் என்.எம்.பி. காஜாமைதீன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.


இதில் மாவட்ட செயலாளர் செய்யது அபுதாகிர், பொருளாளர் சுசிலாமேரி, துணை அவைத்தலைவர் சேக்தாவூது, மேலாண்மைக்குழு உறுப்பினர் ராஜாகுரு மற்றும் 50 செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருப்பதால் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். பேரிடர் மீட்புக்குழுவுக்கு 50 பேரை தேர்வு செய்து பயிற்சி அளித்து மீட்பு பணிக்கு தயாராக வைத்திருக்க வேண்டும். அதேபோல் மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களையும் தயாராக வைக்க வேண்டும். மேலும் நவீன உபகரணங்கள் கொண்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் ஆம்புலன்ஸ் வாகனத்தை மீட்பு பணிக்கு பயன்படுத்த வேண்டும். அதேபோல் மாவட்ட அலுவலகம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்