பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி

பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி முகாம் நடந்தது.;

Update:2023-09-28 06:40 IST

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புகள் பணித்துறை சார்பாக வாடிப்பட்டி ெரயில்வே நிலையம் அருகில் தனியார் பஞ்சு ஆலையில் வடகிழக்கு பருவ மழையையொட்டி பேரிடர் மீட்பு பணி பற்றிய மாதிரி செயல்முறை விளக்க பயிற்சி முகாம் நடந்தது. பயிற்சி முகாமிற்கு நிலைய அதிகாரி சதக்கத்துல்லா தலைமை தாங்கி பயிற்சி அளித்தார். இதில் தீயணைப்பு வீரர்கள் பேரிடர் காலங்களில் உயிர்களை காப்பாற்ற எவ்வாறு நடந்து கொள்வது, முறையான மற்றும் முறையற்ற மீட்பு நடவடிக்கைகள் பற்றியும் விளக்கி காண்பித்தனர். இதில் ஆலை தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்