பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்
பாங்கல் ஊராட்சியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது.;
வாய்மேடு:
தலைஞாயிறு ஒன்றியம் பாங்கல் ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாரதி தலைமை தாங்கினார். பனங்காடி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சரவணகுமார் முன்னிலை வகித்தார். இதில் தலைஞாயிறு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சந்திரசேகரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற துணைத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.