நூலகத்துக்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டும்- மாற்றுத்திறனாளிகள்
நூலகத்துக்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
கீழ்வேளூரில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறு வாழ்வு நல சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். செயலாளர் ரவீந்தர் முன்னிலை வகித்தார். கிராமங்களில் மாற்றுத்திறனாளிகளை அடையாளம் கண்டு அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கடன் உதவிகள் பெற்றுத்தருவது. கீழ்வேளூரில் பொது நூலகம் தனியார் கட்டிடத்தில் மேல் மாடியில் அமைந்து இருப்பதால் மாற்றுத்திறனாளிகள் சென்று படிப்பதற்கு வசதிகள் இல்லை. எனவே அனைத்து தரப்பினரும் படிப்பதற்கு வசதியாக நூலகத்துக்கு நிரந்தர கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஒன்றிய பொறுப்பாளர் எழிலரசி நன்றி கூறினார்.