மாற்றுத்திறனாளி பெண் விஷம் குடித்து தற்கொலை

கந்திலி அருகே மாற்றுத்திறனாளி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-04 17:26 GMT

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள மண்டல நாயனகுண்டா பகுதியைச் சேர்ந்தவர் அன்புகுமார் (வயது 35), மாற்றுத்திறனாளி. இவருக்கும், ஜோலார்பேட்டை பெரிய மோட்டூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஜெயந்தி (30) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் ஜெயந்தி விஷ்ம குடித்து வாயில் நுரைத்தள்ளிய நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஜெயந்தியின் தந்தை பெருமாள் கந்திலி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலை செய்து கொண்ட ஜெயந்திக்கு திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்