மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டம்

நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 28-ந்தேதி நடக்கிறது.;

Update: 2023-07-22 21:52 GMT

நெல்லை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28-ந்தேதி காலை 11.30 மணிக்கு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடக்கிறது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி குறைகளை கேட்கிறார். கூட்டத்தில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான உதவிகள் பெற கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்