மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம்
கொள்ளிடத்தில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது;
கொள்ளிடம்:
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் கொள்ளிடம் ஒன்றியத்தின் சார்பில் நடைபெற்றது. கொள்ளிடம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பழனிவேல் தலைமை தாங்கினார். கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன், வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி, சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி வரவேற்றார். ஒன்றியக்குழு துணை தலைவர் பானுசேகர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக துளசேந்திரபுரம் அரசு மேனிலைப்பள்ளியில் மரக்கன்று நடப்பட்டது. இதில் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள், தணிக்கையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மலர் கண்ணன் நன்றி கூறினார்.