ஆனத்தூர்திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா
ஆனத்தூர் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆனத்தூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகளும், இரவு அம்மன் வீதிஉலா, போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் திருக்கல்யாணம் உற்சவம், பாண்டவர் வனவாசம், அர்ஜுனன் தபசு கரகம் எடுத்தல் போன்றவையும் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த விழாவில் ஆனத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர்.