டிப்ளமோ, பி.எஸ்சி. முடித்தவர்கள் 2-ம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

டிப்ளமோ, பி.எஸ்சி. முடித்தவர்கள் 2-ம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு.;

Update: 2022-06-23 21:40 GMT

சென்னை,

டிப்ளமோ, பி.எஸ்சி. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாக 2-ம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும் உறுப்புக்கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், சுயநிதி கல்லூரிகளில் 2022-23-ம் கல்வியாண்டில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்.

www.tnlea.com, www.accet.co.in, www.accetedu.in என்ற இணையதளங்களில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். சான்றிதழ்களையும் அதே இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூலை) 23-ந்தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

2-ம் ஆண்டு பி.இ., பி.டெக். பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாகவே இந்த கல்வியாண்டில் நடைபெறும். மேலும் இதுதொடர்பான தகவல்களுக்கு 04565-230801, 04565-224528 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்