தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-07-02 20:48 GMT

செயல்படாத கண்காணிப்பு கேமரா

மதுரை மாவட்டம் மேலூர் பஸ் நிறுத்தும் இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை. இதனால் அங்கு திருட்டு போன்ற சமூக விரோத செயல்கள் நடந்தால் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே கண்காணிப்பு கேமராவை விரைவாக சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மேலூர்.

கழிவுநீர் கால்வாயை மூட வேண்டும்

மதுரை பனகல் சாலையில் மருத்துவக்கல்லூரி வாசலில் இருந்து அண்ணா பஸ் நிலையம் வரை உள்ள கழிவுநீர் கால்வாய திறந்த வெளியாக உள்ளது. இதனால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. மேலும் கால்வாய் குப்பைகள் நிறைந்து சுகாதாரமற்ற நிலை உள்ளது. எனவே மருத்துவக்கல்லூரி முதல் அண்ணா பஸ் நிலையம் வரை உள்ள கால்வாயை சிமெண்டு மூடி அமைத்து மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்புமணி, மதுரை.

நடவடிக்கை தேவை

மதுரை மாவட்டம் கள்ளிக்தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்குடி தாலுகா சிவரக்கோட்டை கிராமத்தில் கிழக்கு தெருவில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் குளியல் மற்றும் கழிப்பறைகள் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் உள்ளன. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரவணன், சிவரக்கோட்டை.

மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி பங்களா, சோழவந்தான், தச்சம்பத்து, திருவேடகம், மேலக்கால், தேன்கல்பட்டி, செக்கானூரணி, கரடிக்கல் வழியாக திருமங்கலம் வரை இயக்கப்பட்டு வந்த 999 வழித்தட பஸ் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் வாடிப்பட்டியில் இருந்து திருமங்கலத்திற்கு நேரடியாக செல்ல முடியாமல் இப்பகுதியை சேர்ந்தவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே வாடிப்பட்டி-திருமங்கலம் 999 வழித்தட பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுரிநாதன், சோழவந்தான்.

நாய்கள் தொல்லை

மதுரை பெரியார் பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகிறது. மேலும் இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளும் மிக சிரமப்படுகின்றனர். எனவே நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அழகுமுத்து, மதுரை.

Tags:    

மேலும் செய்திகள்