தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-06-21 18:45 GMT

விபத்து அபாயம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்படுகிறது. தற்போது இப்பகுதியில் சில வாகனஓட்டிகள் அதிக வேகத்தில் பயணிக்கின்றனர். இதனால் சாலையில் செல்லும் நடைபாதையினர் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெருமாள், காரைக்குடி, சிவகங்கை.


நாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலையில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் பொதுமக்கள் அச்சமடையும் நிலை ஏற்படுகிறது. மேலும் நாய்களால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரமேஷ், திருப்பத்தூர், சிவகங்கை.

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து கல்லலுக்கு மாலை வேளையில் குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த வழியாக பயணிக்கும் பள்ளி- கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருந்து பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வழிதடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், தேவகோட்டை

போக்குவரத்து வசதி வேண்டும்

சிவகங்கை மாவட்டம் கீழடி தமிழர்களின் தொன்மையை உலகிற்கு எடுத்துரைக்கும் மையமாக திகழ்ந்து வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்நகருக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் மாணவர்கள், பொதுமக்கள் வரலாற்றை அறிய வாய்ப்பு ஏற்படும். எனவே அதிகாரிகள் இப்பகுதிக்கு மாநிலத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சிவகங்கை.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் வெள்ளிக்குறிச்சி கிராமம் தெற்கு தெருவில் கழிவுநீர் சாலையில் தேங்குகின்றது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மானாமதுரை, சிவகங்கை.

வாகன ஓட்டிகள் அவதி

ராமநாதபுரம் அரண்மனை பின்புறம் உள்ள சிவன் கோவில் கிழக்கு தெரு, பானுமதி நாச்சியார் தெரு, ராணி சத்திரதெரு போன்ற பகுதிகளில் வீட்டின் முன்புறம் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் அதிகாலை வேளைகளில் அவ்வப்போது பெட்ரோல் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனால் வாகனஓட்டிகள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனோகரன், ராமநாதபுரம்.

தாழ்வாக செல்லும் மின்கம்பி

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் புளியமர பஸ் ஸ்டாப் அருகில் தாழ்வாக செல்லும் மின்கம்பியால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமசாமி, பாம்பன், ராமநாதபுரம்.

சரி செய்யப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள வங்கியின் ஏ.டி.எம்.எந்திரம் பழுதடைந்து பணம் செலுத்த முடியாமல் உள்ளது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் மாற்று ஏ.டி.எம். மையங்களை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இங்குள்ள ஏ.டி.எம். எந்திரத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறைஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொய்யாமொழி சங்கர், ராஜசிங்கமங்கலம், ராமநாதபுரம்.

கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் சாலையோரத்தில் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு சிறு, சிறு காயங்கள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுரேஷ், பரமக்குடி, ராமநாதபுரம்.

பழுதான எந்திரம்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சேரந்தை கிராமத்தில் உள்ள உவர் நீரை நன்னீராக்கும் எந்திரம் பழுதடைந்து உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் குடிப்பதற்கு தண்ணீரின்றி அவதியடைகின்றனர். மேலும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படும் குடிநீரும் போதுமானதாக இல்லை. இதனால் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எந்திரத்தை சரிசெய்யவும், சீரான இடைவெளியில் குடிநீரை வினியோகிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சண்முகவேல், சேரந்தை, ராமநாதபுரம்.

Tags:    

மேலும் செய்திகள்