தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;
விபத்து அபாயம்
மதுரை சர்வேயர் காலனி 120 அடி ரோட்டில் இருந்து மாட்டுத்தாவணிக்கு செல்லும் மெயின் ரோட்டில் சாலையின் இரு பக்கமும் பள்ளங்கள் உள்ளன. இதனால் விபத்துக்கள் அடிக்கடி நடக்கின்றது எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுந்தர்ராஜ், மதுரை.
பகலில் எரியும் தெருவிளக்குகள்
மதுரை அவனியாபுரம் பஸ் நிலைய பகுதிகளிலும் மற்றும் 92-வது வார்டு பகுதியிலும் பகலில் மின்விளக்கு எரிந்த வண்ணம் உள்ளது. இதனால் மின்சாரம் அதிகம் வீணாகிறது. எனவே இதனை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
பொதுமக்கள், மதுரை.
நாய்கள் தொல்லை
மதுரை மாநகர் பெரியார் பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலைய பகுதிகளில் நாய்கள் அதிகம் சுற்றித்திரிகின்றன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
குமரன், மதுரை.
பொதுமக்கள் அவதி
மதுரை செல்லூர் கபடி சிலை ரவுண்டானா அருகில் பயணிகள் நிழற்குடை இல்லாத காரணத்தால் பொதுமக்கள் வெயிலிலும் மழையிலும் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கர பாண்டியன், மதுரை.
சேதமடைந்த சாலை
மதுரை மாநகரில் முக்கிய சாலையாக உள்ள முனிச்சாலை ரோடு மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
பிரேம், மதுரை.