தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-06 19:49 GMT

சேதமடைந்த கட்டிடங்கள்

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கருவூல அலுவலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் ஆகிய கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது. இந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபரீதம் எதுவும் நிகழ்வதற்கு முன்பாக சேதமடைந்த கட்டிடங்களை விரைவாக சீரமைக்க வேண்டும்.

விபத்தை ஏற்படுத்தும் தடுப்பு

விருதுநகர் ஆனைகுழாய் தெருவிளக்கு அருகே செல்லும் சாலையில் பள்ளம் ஏற்பட்டு பலநாட்கள் ஆகியும் இன்னும் சரிசெய்யப்படாத நிலை உள்ளது. இதனால் இங்கு எச்சரிக்கைக்காக வைக்கப்பட்ட தடுப்பு அகற்றப்படாததால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் இந்த தடுப்பில் மோதி விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை மூடி இந்த தடுப்பை அகற்ற வேண்டும்.

பொதுமக்கள் அவதி

விருதுநகர் அருகே சின்னவள்ளிகுளம் கிராமத்தில் இருந்து ரோசல்பட்டி செல்லக்கூடிய சாலை முற்றிலும் சேதமடைந்து கற்குவியலாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த அல்லல்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இந்த பகுதி மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலை சீரமைக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் கூரைக்குண்டு பஞ்சாயத்தை சேர்ந்த முத்துராமலிங்க நகர் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்குவரத்திற்கு இடையூறு

விருதுநகர் மாவட்டம் கச்சேரி ரோட்டில் இருந்து மதுரை செல்லும் சாலையில் அமைந்துள்ள மணிக்கூண்டானது வாகனஓட்டிகளுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் சாலை நடுவே அமைந்துள்ளது. இதனால் வாகனஓட்டிகள் தங்களின் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் மணிக்கூண்டை அகற்ற வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்