தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-10-09 01:01 GMT

குண்டும்-குழியுமான சாலை

மதுரை 72-வது வட்டாரத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் நகர் பகுதி 1 முதல் 11 வது தெரு வரை உள்ள அனைத்து சாலைகளும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. அனைத்து தெருவிலும் பாதாள சாக்கடை நிரம்பி வழிகிறது.எனவே இதனை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள், மதுரை.

சாலையில் ஓடும் சாக்கடை நீர்

மதுரை புதூர் அருகே மாற்றுத்திறனாளி அலுவலகம் செல்லும் சாலையில் 3 வாரங்களுக்கு மேலாக சாக்கடை நீர் கசிந்து ஓடி கொண்டிருக்கிறது. இதைப்பற்றி பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், புதூர்.

சாலை சீரமைக்கப்படுமா?

மதுரை ஜெயந்திபுரத்தில் உள்ள பாரதியார் சாலை மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுவதால் மழை பெய்தால் மழை நீர் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. சேதமடைந்த சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், ஜெயந்திபுரம்.

குப்பை அகற்றப்படுமா?

மதுரை திருநகர் பஸ் நிறுத்தம் அருகே குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. இதனால் சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படுவதோடு. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திருநகர்.

நூலகம் திறக்கப்படுமா?

சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தில் இருக்கும் கிளை நூலகம் பூட்டியே கிடக்கின்றது.இதனால் இந்த கிராமத்தில் இருக்கும் படித்த இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் சோழவந்தான் அல்லது வாடிப்பட்டி சென்று படிக்க வேண்டி உள்ளது.எனவே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் நூலகம் தொடர்ந்து செயல்பட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுரிநாதன், சோழவந்தான்.

Tags:    

மேலும் செய்திகள்