தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வாகனஓட்டிகள் அச்சம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் வாகனஓட்டிகள் சிலர் பொதுமக்களுக்கு இடையூறாக அதிக வேகத்தில் பயணிக்கின்றனர். இதனால் சாலையில் பயணிக்கும் மற்ற வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகேஷ், காரைக்குடி.
தொல்லை தரும் நாய்கள்
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பகுதியில் நாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. சாலையில் செல்லும் வாகனஓட்டிகளை நாய்கள் துரத்துவதால் சிறு, சிறு விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்துகிறது. எனவே நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாதவன், திருக்கோஷ்டியூர்.
கருவேலமரங்கள் ஆக்கிரமிப்பு
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் சாலையோரங்களில் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள் சிறு, சிறு விபத்துகளில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. பொதுமக்களும் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முரளி, இளையான்குடி.
தொடர் மின்தடை
சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதிக்குட்பட்ட பனங்குடி கிராமத்தில் தொடர் மின்தடை ஏற்படுகிறது. இதனால் வீட்டு வேலைகள் பாதிக்கப்படுவதுடன், பள்ளி மாணவர்கள் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் ஏற்படும் மின்வெட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவீந்திரன், பனங்குடி.
சுகாதார சீர்கேடு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி 29-வது வார்டு பகுதியில் தூய்மை பணிகள் சரிவர செய்யப்படுவதில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை உள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள தெருவிளக்கு எரியவில்லை. எனவே இதற்கு தீர்வுகாண சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வமீனா, காரைக்குடி.