'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-01-01 20:19 GMT

சாலையில் செல்லும் கழிவுநீர்

மதுரை திருப்பரங்குன்றம் சிலைமான் ஓம்சக்தி நகர் பகுதியில் சாக்கடை செல்வதற்கு போதிய வசதி இல்லாமல் வாருகால் நிரம்பி வழிந்து காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரவணன், சிலைமான்.

போக்குவரத்து நெரிசல்

மதுரையில் காளவாசல், முடக்குசாலை, கோச்சடை, துவரிமான் செல்லும் மேலக்கால் மெயின்ரோட்டில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. வானக நெரிசலில் சிக்கி வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே முடக்கு சாலை முதல் மேலக்கால் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரான போக்குவரத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ராஜன், மதுரை.

பள்ளங்கள் மூடப்படுமா?

மதுரை தவுட்டு சந்தை மஹால் 8 வது தெருவில் குடிநீர் குழாய் பதித்தனர். பணிகள் முடிந்த பின்னர் அந்த பள்ளங்களை மூடாமல் தெரு மேடு பள்ளமாக காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் அந்த பகுதி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணன், மதுரை.

வேகத்தடை வேண்டும்

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி புதிய தாலுகா அலுவலகம் கடந்த வாரம் மதுரை -விருதுநகர் நான்கு வழிச்சாலையில் திறக்கப்பட்டது..சாலையில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது..எனவே உடனடியாக சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..

ந.மாரீஸ்வரன், கள்ளிக்குடி.

மயானப்பாதை சீரமைக்கப்படுமா?

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா கொண்டு ரெட்டிபட்டி கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் பாதை முள் புதர் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முட்புதர்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருண், கொண்டரெட்டிபட்டி.

Tags:    

மேலும் செய்திகள்